சமையல் இந்த வார்த்தையை இந்தக் கட்டுரைக்குத் தோதாக என் வசதிக்கு பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முயற்சித்ததில் ;
சமையல்= ச+மையல் - என்று ஆனது .
ச என்ற ஒற்றை எழுத்துக்கு "சகி" என்றி நாமாக அர்த்தப் படுத்திக் கொள்வோம்
மையல் -இதற்க்கு பொருள் தெரியாதோர் தமிழ் கூறும் நல்லுலகில் எவரேனும் உண்டோ ?
இப்போது பாருங்கள் சமையல் என்ற சொல்லுக்கு "சகியின் மீது மையல்" என்று அழகான பொருளை நாமாகக் கற்பனை செய்து கொள்ளலாம் தானே.
சகி யார் "சகித்துக் கொள்பவர்களை சகிஎன்று விளிக்கலாம் ,சகி என்ற சொல்லுக்கு "மனைவி" என்றும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம் ,பிரிய சகி- பிரியமான மனைவி .
சரி இனி சமையலுக்கு வருவோம் ...
சகியான மனைவியின் மீது அன்பான பண்பான கணவருக்கு (நோட் திஸ் பாயிண்ட் )மையலை ஏற்படுத்தும் வண்ணம் உதவும் ஒரு காரியம் சமையல் என்று பொருள் படுத்திக் கொள்ளலாம் இல்லையா?
சமையல் அருமையாக அமைந்து விட்டால் அந்தத் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகளின் வீரியம் பெருமளவு குறையக் கூடும். கூடவே "சமைத்த கைக்கு தங்கக் காப்பு" எனும் வார்த்தை ஜாலம் மூலம் மையலின் சதவிகிதமும் கூடும் .ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் தாம்பத்யம் சிறக்க "மையல்" எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் சமையலும் தான்.
கற்பனை வளம் குறைஞ்சு காணாம போயிடக் கூடாதில்லையா ?!
அதான் அப்பப்போ இப்படி ஏதாச்சும் எழுதிப் போட்டுடறது .
16 comments:
:)))
தையல் மையல் சமையல் நு சொல்லி நம்மள நாமே ஏமாத்திக்கிட்டு இருக்கோம்னு தோணுதுப்பா
புரண்டு புரண்டு நாய் போல சொரிந்து கொண்டாலும் புல்லரிப்பு நிக்க மாட்டேன்கரதுங்க.
--வித்யா
கற்பனை வளம் குறைஞ்சு காணாம போயிடக் கூடாதில்லையா ?!
அதான் அப்பப்போ இப்படி ஏதாச்சும் எழுதிப் போட்டுடறது .//
:)))
சிரிப்பிற்கு என்ன அர்த்தமோ !
விதூஷ் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகே இந்தக் கேள்வி கேட்கத் தோன்றியது.
நன்றி முல்லை ...
//சந்தனமுல்லை said...
:)))//
சிரிப்பிற்கு என்ன அர்த்தமோ !
விதூஷ் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகே இந்தக் கேள்வி கேட்கத் தோன்றியது.
நன்றி முல்லை ...
விடுபட்ட மேற்கோளுக்காக மறுபடியும்
//அமிர்தவர்ஷினி அம்மா said...
தையல் மையல் சமையல் நு சொல்லி நம்மள நாமே ஏமாத்திக்கிட்டு இருக்கோம்னு தோணுதுப்பா//
ஏமாற்றம் எதில் தான் இல்லை சாரதா? அதையே யோசித்துக் கொண்டிருப்பதை விட இப்படிப் பட்ட சமாதானங்கள் சில நேரங்களில் பலன் அளிக்கக் கூடும் .
இது என் கருத்து மட்டுமே.
Vidhoosh said...
புரண்டு புரண்டு நாய் போல சொரிந்து கொண்டாலும் புல்லரிப்பு நிக்க மாட்டேன்கரதுங்க.
--வித்யா
எதுக்கு வித்யா இத்தனை கடினமான வார்த்தைப் பிரயோகம்?
நீங்க இவ்ளோ புல்லரிச்சுப் போற அளவுக்கு இங்க ஒன்னும் எழுதிடலை நான்.இது என் சொந்தக் கருத்து,இதை நான் சொல்றதால யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் எந்த வகையில் நினைத்து இந்த பின்னூட்டத்தை இட்டிருந்தாலும் சரி இடக்காக கேட்கப் பட்ட தொனியே தோன்றியதால் இந்த பதிலை பதிவு செய்கிறேன்.
புதுகைத் தென்றல் said...
கற்பனை வளம் குறைஞ்சு காணாம போயிடக் கூடாதில்லையா ?!
அதான் அப்பப்போ இப்படி ஏதாச்சும் எழுதிப் போட்டுடறது .//
:)))
நன்றி தென்றல் ...
சிரிப்பிற்கு என்ன அர்த்தமோ !
விதூஷ் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகே இந்தக் கேள்வி கேட்கத் தோன்றியது.
தங்கள் கற்பனையோட்டத்தையும், சமையலை அழகாக பகுத்ததையும் ரசித்து சிரித்ததை ஸ்மைலிகளால் இட்டிருந்தேன் மிஸஸ்.தேவ். என்ன பண்றது...குறியீடுகளாலும், ஸ்மைலிகளாலும் சுருங்கிப்போனது என் உலகம்!
// சந்தனமுல்லை said...
தங்கள் கற்பனையோட்டத்தையும், சமையலை அழகாக பகுத்ததையும் ரசித்து சிரித்ததை ஸ்மைலிகளால் இட்டிருந்தேன் மிஸஸ்.தேவ். என்ன பண்றது...குறியீடுகளாலும், ஸ்மைலிகளாலும் சுருங்கிப்போனது என் உலகம்!//
புரிந்து கொள்ளத் தான் குறியீடுகள் ... புரிகிறது
மீண்டும் நன்றி முல்லை
:)
நல்லா இருந்துச்சு
மேடம். ஒரு நாளைக்கு சாப்பாடு தீய்ஞ்சா ரெண்டு நாளைக்கு சாப்பாடு கிடைக்காது. எப்படி ? உங்க முதல் நான்கு பாரா அதை வெளக்குது.
நன்றி Tamil Home Recipes...
நன்றி செந்தழல் ...
:)
enna kodumai sir ithu
:-)) ”ச” சகியாகவோ சகாவாகவோ இருந்துவிட்டு போகட்டும்... அவரவர் வசதிக்கேற்ப :-)
Post a Comment