அஷ்வியின் கணவர் இந்த மாத டூர் ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருந்தவர் தன் போக்கில் கேட்டார். இந்த மாசம் முப்பது நாளா ...முப்பத்தியொரு நாளா? காலண்டர் பார்த்து சொல்லேன். அஷ்வி எழுந்து போய் காலண்டர் எல்லாம் பார்க்கவில்லை கை மடக்கி விரல் முட்டிகளை எண்ணிப் பார்த்து விட்டு சொன்னாள் .
முப்பது நாள்
ஹே ...என்ன நீ கலண்டர் பார்க்காமயே சொல்ற...தப்பா சொல்லிடப் போற...நான் தப்பா ரிப்போர்ட் அனுப்பிறப் போறேன்..என் செல்லுல காலண்டர் இருக்கும் பார்த்து சொல்லேன்.
இல்லங்க சரியாத் தான் இருக்கும் ...தப்பாக வாய்ப்பே இல்லை.
இங்க பாருங்களேன் ...இப்படி கையை மடக்கிகிட்டு பார்த்தா விரல் முட்டி தெரியுதா? சுட்டு விரல் முட்டியில இருந்து கவுண்டிங் ஸ்டார்ட் பண்ணலாம் ...ஜனவரி ..பிப்ரவரி...மார்ச்...ஏப்ரல்...
மேடெல்லாம் முப்பத்தியொரு நாட்கள் ...
பள்ளமெல்லாம் முப்பது நாட்கள்...
மூணாம் கிளாஸ்ல "சரோஜினி " டீச்சர் சொல்லிக் கொடுத்தது .அவ்ளோ சீக்கிரம் மறக்குமா என்ன?
கொஞ்சமே கொஞ்சம் ஆச்சரியமாய் பார்த்து விட்டு ... ஹே எனக்கும் தான் சொல்லிக் கொடுத்தாங்க ..சட்டுன்னு மறந்திட்டேன் பார்...அஷ்வியின் கணவர் வேக வேகமாய்ச் சொல்ல ...
ஆமாமாம் ...சொல்லிக் கொடுத்திருப்பாங்க ...சொல்லிக் கொடுத்திருப்பாங்க ...சொல்லி விட்டு அவள் சிரிக்க ...ஆமாமில்ல என்று கூடச் சிரித்தாலும் ... தலை வலிக்குது ரிப்போர்ட் எழுதி போய் ஸ்ட்ராங்கா ஒரு காபி எடுத்துட்டு வாயேன் என்றார் .
ஹூம் ...அப்பாவானாலும் ...கணவரானாலும் ஆண்கள் ...ஆண்கள் தான்...தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் அஷ்வி !!!
3 comments:
பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html
//சுட்டு விரல் முட்டியில இருந்து கவுண்டிங் ஸ்டார்ட் பண்ணலாம் ...ஜனவரி ..பிப்ரவரி...மார்ச்...ஏப்ரல்...
மேடெல்லாம் முப்பத்தியொரு நாட்கள் ...
பள்ளமெல்லாம் முப்பது நாட்கள்... //
*******
ஆம்... முன்பெல்லாம் வீட்டில் இப்படி கூட பார்ப்பதுண்டு...
மலரும் நினைவுகள், அதுவும் பசுமை நினைவுகள்... வரிசையாக நினைவுக்கு வருகிறது...
அதை கிளறிய மிஸஸ்.தேவ்... உங்களுக்கு என் நன்றி..
நிதர்சன பதிவு
வாழ்த்துக்கள்
விஜய்
Post a Comment