Friday, October 23, 2009

மௌனமே சௌக்கியமா ?!

நம் படுக்கை அறை தலையணைகளின்

உறைகளை மீறி

வெடித்து விடுவன போல

திமிறிக் கொண்டிருந்த

மௌனக் கரைசல்கள்

சிந்தாமல் சிதறாமல்

மெல்லக் கசிந்து மெத்தை நனைத்தன

அதை நாம்

அறிந்தும் அறியுமுன்னே

மெத்தையும் திணறித் திமிறவே

பிறிதொரு நாளில்

சமையல் உள்ளுக்குள் கசிந்தோடிப் பரவிய

மௌனச் சாம்பார்

அக்கணமே எங்கும் நீக்கமற நிறைந்து

தளும்பிச் சிலும்ப ;

எப்போது கதவிடுக்கில்

கசியத் தொடங்குமோவென

சொல்லொணாத் தயக்கத்தில்

நானும் நீயும்

முகம் பார்த்துக் கொண்ட தருணத்திலா

அன்றியும்

என் அம்மா முதல் முறை

கதவைத் தட்டிய தருணத்திலா

எத்தருணத்தில்

கரைந்து காணாமல் போனதந்த

பெரு மௌனம் !!!

எப்படியோ ...

கசிவு நின்றதில்

இருவருக்கும் சௌக்கியமே ...!?

7 comments:

ஷண்முகப்ரியன் said...

மௌனம் உறையும் கணம்
மௌனம் உடையும் கணம்
இரண்டுமே வாழ்க்கையின் ஆழங்கள்.
அதனை அப்படியே கொண்டு வந்திருக்கும் கவிதை.
உரத்த பாராட்டுக்கள், திருமதி.தேவ்.

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

அது சரி(18185106603874041862) said...

ஆஹா...நேத்தி கேட்டதுக்கு இன்னிக்கு கடைய தொறந்துட்டாங்கப்பா...தீவாளிக்கு இத்தினி நாளா லீவு விடுவாங்க.....

அது சரி(18185106603874041862) said...

தாமரை எழுதுன கவிதை ஒண்ணு ஞாபகம் வருது...வசீகரான்னு ஆரம்பிக்கும்...

இந்த கவிதையும் அதே மாதிரி அழகா இருக்கு....நம்ம ரஹ்மானை ஒரு மெட்டு போட சொன்னால் சூப்பர் ஹிட் தான்!

அது சரி(18185106603874041862) said...

அதெல்லாம் சரி....அதான் இந்த வருஷ கோட்டா முடிஞ்சி போச்சின்னு கடைய மூடிட்டு போயிடாதீங்க...:0)))

அது சரி(18185106603874041862) said...

அந்த தமிழ் பயணிகள் நாள்காட்டில அக்டோபர் 25, கண்டலூர் வள்ளித் திருமணம்னு காட்டுது...

கண்டலூர் வள்ளிக் கோயில்ல சுண்டல் குடுப்பாங்களா?? :0))

R.Gopi said...

மௌனம் உறைந்து பின் உடைந்த தருணம் ரெண்டுமே நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது...

வாழ்த்துக்கள் மிஸஸ் தேவ்...