Saturday, September 12, 2009

வனாந்திரம் ...

நீள் வனாந்தரம்
மரகதக் குன்றுகள்
மாணிக்கச் சூரியன்
துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
தகிக்கும் தங்கம் போல்
உரையாடும் மென்இலைகள் ...
அரவமாய் சல சலக்கும்
நிறமற்ற நீரோடை ...
வெள்ளியாய் கிள்ளிப் போட்ட
கண்ணாடி அப்பளமாய்
வானூரும் தண்ணிலா ...
கர்ஜிக்கும் சிங்கங்கள்
கண்களால் மினுக்கும் புலிகள்
நீருருஞ்சும் யானைகள்...
தாழப் பறக்கும் புள்ளினங்கள் ...
தாழை மொட்டவிழ
கம கமக்கும் வனம்.
வனம் ... நீள் வனம் ... வனாந்திரம்
அழகே...!
வனம்
அழகே ..!
கொள்ளை அழகின் கோடி அழகு !!!

6 comments:

ஜாஹிர் ஹுஸைன் said...

வாவ்,
காடு என்று ஒற்றை வார்த்தையில் சொல்லக் கூடியதை உங்கள் கற்பனையின் மூலம் இவ்வளவு அழகாக கவிதை வடித்து இருக்குறீர்கள்
பாராட்டுக்கள்

R.Gopi said...

//துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
தகிக்கும் தங்கம் போல்
உரையாடும் மென்இலைகள் ...//

இது ஒன்று போதுமே... உங்க‌ள் த‌மிழின் ஆளுமையை சொல்வ‌த‌ற்கு... ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு...

திகில் வ‌ன‌த்தை மேலும் அழ‌காக்கி, ரசிக்க வைத்த‌து உங்க‌ளின் செந்த‌மிழ்...

நட்புடன் ஜமால் said...

நல்லா இரசிச்சி இருக்கீங்க.


--------------

மஞ்சள் நிறம் அதிகம் நேசிப்பீங்களோ.

ஷண்முகப்ரியன் said...

குடுகுடுப்பை சார் எழுதியதைப் பார்த்த பின்னரே உங்கள் அசல் கவிதையைப் படிக்க நேர்ந்தேன்.
வெறும் காடு உங்கள் பார்வையால் கவிதைக் காடாகியது.
பாராட்டுக்கள்.

நேசமித்ரன் said...

நல்ல கவிதை

வர்ணித்திருக்கும் விதம் சொக்க வைக்கிறது

அமிர்தவர்ஷினி அம்மா said...

வர்ணணை ஜாலம்