Sunday, September 6, 2009

கேளுங்கள் இதொன்றும் ரகசியமல்ல ;

அசைவுகளற்றதொரு
சமாதானத்தின்
எருமைச் சோம்பல்
முறியும் போதில்
முளையிடும் சன்னக் கோபத்தில்
கடுகி மறையும்
முந்தைய சகிப்பு
பின்னும் ஒரு கோபப் பரவெளி
முன்னும்
பின்னும்
அசைதலைப் போலவே அலைதல்
கோபங்களால் நிரப்பப் பட்ட
எனது காபிக் கோப்பை
சிதறியதும்
பீங்கான் ஆனது ;
கேளுங்கள் இதொன்றும் ரகசியமல்ல !

3 comments:

அது சரி(18185106603874041862) said...

//
எருமைச் சோம்பல்
முறியும் போதில்
//

எருமை மாடு சோம்பல் முறிக்கிறது ஞாபகம் வருது...

அது சரி(18185106603874041862) said...

கவிதை புரிஞ்சுதா, புரியலையான்னு எனக்கு இன்னும் புரியலை...

அமிர்தவர்ஷினி அம்மா said...

”நச்” கவிதை