Friday, August 28, 2009

களிக்கூத்து


பட்சிகள் கரையா
பகலற்ற கருங்கானகம்

இரையும் பூச்சிகள்

இரையாக்கும் பாம்புகள்

மத்தியானத் தூக்கத்தில்

மடல் அவிழ்க்கும் தாழம்பூக்கள்

யாமத்தில் நாசி துளைக்கும்

நன்னாரி மரப்பட்டை

சில்லென்று ... மோருண்டு ...

சிலு சிலுக்கும் காற்றும் உண்டு ...

பக்கத்தில் பத்தினிப் பெண் ...!!!

யாரங்கே ... ?

உச்சி மரப்பேய்

தானாய் ஆடும் களிக்கூத்து

காளி கூளிக்கு கூறும் செய்தி

நம்மில் ஒருத்தி நாளை வருவாள்?!

4 comments:

அது சரி(18185106603874041862) said...

நல்லாருக்கு...ஆனா எனக்கு புரியலை...

//
காளி கூளிக்கு கூறும் செய்தி

நம்மில் ஒருத்தி நாளை வருவாள்?!
//

இதுக்கு என்ன அர்த்தம்?

ப்ரியமுடன் வசந்த் said...

//உச்சி மரப்பேய்

தானாய் ஆடும் களிக்கூத்து//

ஆஹா புதிய வர்ணிப்பு @உதாரணம்

குடுகுடுப்பை said...

அக்கா அடுத்த கவுஜ ரெடி பண்ணவா? ஒன்னும் புரியல

யாத்ரா said...

நல்ல கவிதை நல்ல மொழி.