கைகளைத் துடுப்பாக்கி
காற்றைக் குடைந்து
சோம்பி மிதக்கும்
துகள்கள் மறுத்து
இன்னும் ...இன்னும்காற்றைக்
கடைந்து கடைந்து
வளி மண்டலம் துளைத்து
வலி மண்டலம் துடைத்து
விட்டு விடுதலையாகி
விதை வெடித்த பஞ்சு
பறப்பதைப் போல்
இலகுவாய்ப் பற
துக்கம் மறந்து போம்
துன்பம் பறந்து போம்
ஆதலின்
பற...
பற...பற...பற
9 comments:
பெரிய ஆசைதான். பறக்கலாம். பஞ்சாய்ப் பறக்க
மனம் லேசாக வேண்டும்.
அழகான கவிதை, மிஸஸ்.தேவ்.
//கைகளைத் துடுப்பாக்கி
காற்றைக் குடைந்து //
மிஸஸ்.தேவ்,
பறக்க துடுப்பே தேவையில்லை.உங்கள் கவிதையைப் படித்தாலே போதும்.
படிக்கும்போதே பறக்கவும் செய்கிறது மனசு.
வளி மண்டலம் துளைத்து
வலி மண்டலம் துடைத்து ]]
அருமை.
//
விட்டு விடுதலையாகி
//
விட்டு விடுதலையாகி விடத்தான் இத்தனை பறத்தல்களும்....ஆனால் விடுதலை எது என்று தெரியாமல் பறத்தலிலேயே காலம் கடந்து விடுகிறது....என்னை விட வேகமாக பறக்கிறது காலம்...It's a race against time...
//வளி மண்டலம் துளைத்து
வலி மண்டலம் துடைத்து
விட்டு விடுதலையாகி
விதை வெடித்த பஞ்சு
பறப்பதைப் போல்
இலகுவாய்ப் பற//
நல்லா இருக்கு....
வளி மண்டலம்...வலி மண்டலம்...
விதை வெடித்த பஞ்சு போல் இலகுவாய் பற...
சூப்பர்....
பறந்த பின் தயிர்சாப்பிட்டு சற்று இளைப்பாறவும்
விதை வெடித்த பஞ்சு போல் இலகுவாய் பற...
கவர்ந்த வரி
:)
கவிதை நல்லா இருக்குங்க.
Post a Comment