கடக்கும் பாதைகள்
ஓர் நாள்
பேசத் தொடங்கினவாம்
கடந்து போனவர்களைப் பற்றி ;
அதில் மாண்டவர்களும் உண்டோ?
மீண்டவர்கள் மட்டுமா ?
கேள்விகள் கேட்டனவாம்
எல்லைக் கற்கள் ;
பூவும்
பிஞ்சும்
காயும்
கனியும்
உதிரும் சருகும்
யாவும் ஒன்றே
கடத்தல் ஒரு செயல்
கடப்பது திண்ணம்
மாள்வதும் மீள்வதும்
கணக்கில் ஒன்றே
கணக்கான கணக்கு
கொக்கரித்தன பாதைகள்
நடுகற்கள் ஆயின எல்லை கற்கள்...
கடப்போம்
யாவரும்
என்றேனும் ஒருநாள்?!
ஓர் நாள்
பேசத் தொடங்கினவாம்
கடந்து போனவர்களைப் பற்றி ;
அதில் மாண்டவர்களும் உண்டோ?
மீண்டவர்கள் மட்டுமா ?
கேள்விகள் கேட்டனவாம்
எல்லைக் கற்கள் ;
பூவும்
பிஞ்சும்
காயும்
கனியும்
உதிரும் சருகும்
யாவும் ஒன்றே
கடத்தல் ஒரு செயல்
கடப்பது திண்ணம்
மாள்வதும் மீள்வதும்
கணக்கில் ஒன்றே
கணக்கான கணக்கு
கொக்கரித்தன பாதைகள்
நடுகற்கள் ஆயின எல்லை கற்கள்...
கடப்போம்
யாவரும்
என்றேனும் ஒருநாள்?!
13 comments:
என்னாதான் சொல்லவறீங்க.
அக்கா இந்த சின்னவனுக்கு புரியிற மாதிரி கவிதை எழுதப்படாதா?
ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க ...
என்றேனும் ஒரு நாள் வந்தே தீரும்
அது எதுவாகினும் ...
இல்லாமையில் இருந்து தான் இருத்தல் ஆரம்பிக்கிறது...எல்லா இருத்தல்களும் என்றாவது ஒரு நாள் இல்லாமையில் தான் முடியும்...கடந்து போனவர்களின் சாட்சிகளாய் கடக்கப் போகிறவர்களை எதிர்பார்த்து எல்லைக் கற்கள் நின்று கொண்டே இருக்கின்றன...பாதையெங்கும் மெளனமாய்...
இது ஒரு வட்டம்....இந்த வட்டத்தை ஏற்க மறுத்து இருத்தலை நிலை நாட்டத் தான் காசு, பணம், பதவி, பட்டம், குடும்பம், பிள்ளை, வீடு, அரண்மனை, கோயில், தர்மம், எழுத்து, பிரபலம் எல்லாமே...
ஆனால், சிதைவுகளாய் மட்டுமே சிக்கும் சிந்து சமவெளி நாகரீகமாய், கசக்கிப் போட்ட குப்பையாய் காலம் எல்லாத்தையும் வாரிக் கொண்டு தான் போகிறது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் அவர்க்கே இடம் ஏது!!
யாரங்கே ?!
அண்ணன் குடுகுடுப்பையை பிடித்து என பதிவுகள் அனைத்தையும் இம்போசிசன் எழுத சொல்லுங்கள்!
அக்காவா? நானா ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நட்புடன் ஜமால் said...
ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க ...
என்றேனும் ஒரு நாள் வந்தே தீரும்
அது எதுவாகினும் ...
நிச்சயமாக வந்தே தீரும் தான் ..அதற்குள் தான் அத்தனை ஆட்டங்களும்.
அது சரி said...
இல்லாமையில் இருந்து தான் இருத்தல் ஆரம்பிக்கிறது...எல்லா இருத்தல்களும் என்றாவது ஒரு நாள் இல்லாமையில் தான் முடியும்...கடந்து போனவர்களின் சாட்சிகளாய் கடக்கப் போகிறவர்களை எதிர்பார்த்து எல்லைக் கற்கள் நின்று கொண்டே இருக்கின்றன...பாதையெங்கும் மெளனமாய்...
இது ஒரு வட்டம்....இந்த வட்டத்தை ஏற்க மறுத்து இருத்தலை நிலை நாட்டத் தான் காசு, பணம், பதவி, பட்டம், குடும்பம், பிள்ளை, வீடு, அரண்மனை, கோயில், தர்மம், எழுத்து, பிரபலம் எல்லாமே...
ஆனால், சிதைவுகளாய் மட்டுமே சிக்கும் சிந்து சமவெளி நாகரீகமாய், கசக்கிப் போட்ட குப்பையாய் காலம் எல்லாத்தையும் வாரிக் கொண்டு தான் போகிறது!
//
அதுசரி !!!
நான் எழுதின கவிதையை விட உங்க பின்னூட்டம் பெருசு.நான்ந சொல்லன வந்ததை அதை விட தெளிவா நீங்க சொல்லிட்டிங்க,நன்றி நண்பரே.
வல்லிசிம்ஹன் said...
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் அவர்க்கே இடம் ஏது!!
வாஸ்த்தவமே வல்லிம்மா
பாதைகள் பேசத்தொடங்கும் கற்பனை அழகு! நல்லாருக்கு மிஸஸ்.தேவ்!
என்றேனும் ஒரு நாள் வந்தே தீரும்
அது எதுவாகினும் ...//
அதுதான் நம் நம்பிக்கை!!
//பூவும்
பிஞ்சும்
காயும்
கனியும்
உதிரும் சருகும்
யாவும் ஒன்றே//
ஆம்.
//கடத்தல் ஒரு செயல்
கடப்பது திண்ணம்//
நிஜமே.
//கடப்போம்
யாவரும்
என்றேனும் ஒருநாள்?!//
விலக்கில்லை எவருக்கும்.
சிந்திக்க வைக்கும் வரிகள் யாவும் நன்று மிஸஸ் தேவ்!
//
வல்லிசிம்ஹன் said...
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் அவர்க்கே இடம் ஏது!!
August 5, 2009 10:44 PM
//
அது, இந்த மண்ணில் நமக்கே இடமேது இல்ல???
//
மிஸஸ்.தேவ் said...
யாரங்கே ?!
அண்ணன் குடுகுடுப்பையை பிடித்து என பதிவுகள் அனைத்தையும் இம்போசிசன் எழுத சொல்லுங்கள்!
அக்காவா? நானா ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
August 5, 2009 11:49 PM
//
இந்த பனிஷ்மென்ட் எல்லாம் ஒத்துக்க முடியாது...பேசாம அண்ணன் உண்மைத்தமிழனோட எல்லா பதிவையும் அஞ்சு தடவை எழுதச் சொல்லுங்க....
:0)))
Post a Comment