Saturday, December 20, 2008

"தாங்க்ஸ் டு தனிஷ்க் பார் திஸ் நைஸ் விசுவல் அண்ட் மெலடி"

அசின் வரும் புதிய தனிஷ்க் விளம்பரம் ஒன்று நேற்று விசேசமாய் கவனத்தை ஈர்த்தது .கேரளத் தம்பதிகள் ஒரு ஓடத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்,பின்னணியில் நமது ராஜாவின் மெலடி ரொமாண்டிக் ஹிட்

"கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே"...

எடுக்கவா...தொடுக்கவா மயங்கினேன் நானே" மென்மையாக ஒலிக்க அவர்களைக் கடந்து செல்லும் ஓடத்தில் சில பெண்கள் தலை நிறைய மல்லிகைப் பூக்களைச் சூடிக் கொண்டு இவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே தாண்டிச் செல்கின்றனர்.

இதுவரை இது ஒரு சாதா விளம்பரம் தான் .

அதனை அடுத்து ஒரு ஸ்வீட் ட்விஸ்ட் ....!!!

மல்லிகை சூடிச் செல்லும் இளம் பெண்களைக் கண்டு மனைவியாக வரும் அசின் மலர்கள் எதுவும் சூடாமல் முன்புறம் நீண்டு சாட்டை போலத் தொங்கும் தன் பின்னலை எடுத்து அசட்டையாக கொஞ்சம் சடைவுடன் தன் கணவனைப் பார்த்துக் கொண்டே அலட்சியத்துடன் பின்புறம் தூக்கிப் போடவும் ,கணவனாக வருபவர் அசினை சமாதானப் படுத்த வைரம் பதித்த பிளாட்டின நெக்லசை ஏந்திக் கொண்டு மனைவியின் அருகில் நகர்வார்,

கழுத்துக்குத் தானே நெக்லஸ் என்று கழுத்தைக் காட்டும் மனைவியின் பார்வை கணவனின் கை கழுத்து தாண்டி தலைக்குப் போவதைப் புரியாத பாவனையுடன் பின்தொடரும் .கடைசியில் தேர்ந்தெடுத்த வைரம் பதித்த பிளாட்டின நகைகள் அனைத்துமே அசினின் நீண்ட பின்னல் ஜடையிலும் கொண்டையிலும் ரசனையோடு அலங்கரிக்கப் பட்டு நம் கண்களுக்கு விருந்தாகும் .

இந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? இனிமேல் பெண்கள் தம் தலையில் மல்லிகைப் பூக்களுக்கு பதிலாக நகைகளைச் சூடிக் கொள்ளுங்கள் என்றா ? நகை விற்கும் விலையில் அதெல்லாம் அனைத்துப் பெண்களுக்கும் சாத்தியமா என்ன?

அப்படியெல்லாம் இருக்காது...மல்லிகையின் மனம் மயக்கும் தன்மை பிளாட்டின நகைகளுக்கும் உண்டு என்று குறிப்பால் உணர்த்துகிறார்கள் போல?!எது எப்படியோ ?விளம்பரம் மிக அருமையான விதத்தில் கண்களோடு கவனத்தையும் கவர்கிறது,

அந்த விளம்பரம் முடிந்து ...

அடுத்த விளம்பரம் போட்டு ...

அதற்கும் பின் நீண்ட நேரம் எல்லா நிகழ்சிகளையும் பார்த்து அலுத்து சலித்து டி.வியை அணைத்து விட்டு இரவு தூங்கப் போகும் போதும் கூட ,கண்ணில் அசின் தலையில் சூடிக் கொண்ட வைர நட்ச்சத்திரங்கள் டாலடிக்கின்றன.

கனவில் கூட ...

"கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே...ஒலிக்கிறது...

கூடவே மல்லிகைப்பூ வாசம் வேறு ...

"ராஜா ராஜா தான் !

"தாங்க்ஸ் டு தனிஷ்க் ஃபார் திஸ் நைஸ் விசுவல் அண்ட் மெலடி" குறிப்பு:

ஹார்லிக்ஸ் காம்ப்ளான் விளம்பர யுத்தம் கண்டு விளம்பரங்களின் கிரியேட்டிவிட்டி காணமலே போய்விட்டதோ என்று நினைத்த நேரத்தில் இந்த தனிஷ்க் விளம்பரம் கருத்தைக் கவர்வது நிஜம் கலந்த ஆறுதல் .

நம்ம டவுட் :- ராஜாவோட இந்தப் பாட்டு "கடலோரக் கவிதைகள் "படத்துல இருந்து தான் எடுத்திருக்காங்களா இல்ல வேற படமா?

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இரவு தூங்கப் போகும் போதும் கூட //


அய்யா........................

துளசி கோபால் said...

ஹைய்யா ஹைய்யா ஹை......

இன்னும் நாலைஞ்சு இஞ்சு வளரட்டுமுன்னு காத்துருக்கேன்.....

நீங்க சொன்னீங்களேன்னுதான்:-))))))

நட்புடன் ஜமால் said...

கடலோர கவிதைகள் தான் ...

KarthigaVasudevan said...

////இரவு தூங்கப் போகும் போதும் கூட //


அய்யா........................//

குழப்புறிங்க SUREஷ் அய்யா ...என்ன சொல்ல வரீங்க
:(?

KarthigaVasudevan said...

//ஹைய்யா ஹைய்யா ஹை......

இன்னும் நாலைஞ்சு இஞ்சு வளரட்டுமுன்னு காத்துருக்கேன்.....

நீங்க சொன்னீங்களேன்னுதான்:-))))))//

அட போங்க டீச்சர் ...! இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இம்புட்டு சிரிப்பு சிரிக்கறிங்க?! அதெல்லாம் சும்மா விளம்பரத்துக்கு மட்டும் தானாம் !

KarthigaVasudevan said...

//கடலோர கவிதைகள் தான் ...
//

அப்பாடா ஒரு டவுட் கிளியர் ஆயிடுச்சு இப்போ , நன்றி ஜமால்

சந்தனமுல்லை said...

நானும் ரசித்தேன்..அது அசிந்தான்னு ஒரு டவுட்டும் இருந்தது எனக்கு!lol

KarthigaVasudevan said...

// சந்தனமுல்லை said...
நானும் ரசித்தேன்..அது அசிந்தான்னு ஒரு டவுட்டும் இருந்தது எனக்கு!lol//

அசினே தான் சந்தனமுல்லை ...என்ன உங்களை என் வலைப் பக்கம் இப்ப்போதெல்லாம் பார்க்கவே முடியலையேனு இப்போ தான் நினைச்சேன் ! டக்குனு வந்துட்டிங்களே? சந்தோசம் ,அடிக்கடி வாங்க முல்லை .