Monday, June 21, 2010

மௌனிக்கப்பட்ட பதில்களின் அணிவகுப்பு




இரைந்து கிடக்கும் கேள்விகளை
உரசிப் பற்ற வைக்க
சதா முயன்று கொண்டிருக்கும்
சலனக் காட்டின்
சபை நடுவே
மௌனிக்கப்பட்ட பதில்களின்
அணிவகுப்பு ;
பார்க்க விசித்திரமென்ன
நின்று நிதானித்து நிமிர்ந்து
என்றோ ஒரு கணத்திலும்
பதில் சொல்ல விருப்பமில்லை ;
கேள்விகளும் பதில்களுமற்ற
நிசப்தத்தில் கரைந்தாலென்ன
நஷ்டம்!

9 comments:

  1. ஒன்னுமே நஷ்டமில்லைங்க..மௌனம் பலநேரம் லாபம் தானே..;) அணிவகுப்பு க்கு நல்லமரியாதை கிடைக்கும்..

    ReplyDelete
  2. //கேள்விகளும் பதில்களுமற்ற
    நிசப்தத்தில் கரைந்தாலென்ன
    நஷ்டம்!//

    Superb Lines..!!

    My wishes..!!

    ReplyDelete
  3. அட யாத்ரா கமெண்ட்லாம் போடுறாரா இப்ப எல்லாம் ...

    :)

    கவிதை நல்லா இருக்குங்க

    ReplyDelete
  4. நல்ல கவிதை ,
    //
    கேள்விகளும் பதில்களுமற்ற
    நிசப்தத்தில் கரைந்தாலென்ன
    நஷ்டம்!//

    பிடித்த வரிகள் !!

    :)

    ReplyDelete
  5. மௌனம் எப்போதும் லாபம்தான்!

    ReplyDelete
  6. மௌனத்தால் லாபம்தான் .எப்பவுமே. ஆனால் அது நம் சந்தோஷ மௌனமா இருக்கணும்.
    வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete
  7. ரொம்ப அருமைங்க கார்த்திகா. ரொம்ப பிரமாதமான வரிகள். ரொம்பவே ரசிக்கிறேன். :)

    ReplyDelete
  8. நன்றி முத்துலெட்சுமி ...

    நன்றி யாத்ரா

    நன்றி ரங்கன்

    நன்றி நேசமித்திரன்

    நன்றி அன்புடன் அருணா

    நன்றி வல்லிம்மா

    நன்றி விதூஷ்

    ReplyDelete