Thursday, February 25, 2010

தசையினை தீ சுடினும் ...

எதிலோ புதைந்து போனதை எங்கோ தேடி விட்டு
கனவிலிருந்து விழித்தெழுகையில்
தீராத் தேடல்
திகைப்பூண்டாய்
தகை கொள்ளும் நினைவுகள்
தசையினைத் தீ சுடினும்
கண்ணம்மா
நீ தெரிந்து கொள் ;
தேம்பாவணி முற்றத்தில்
கலம்பகம் கை அள்ளி
குறவஞ்சி கொஞ்சியோட
அகமும் புறமும்
பழமொழி பேச
சூளாமணியோடு சிந்தாமணி போல
அந்தாதி பாடும் அபிராமி
ஜன்னல் வழித் தெரியும்
என் அடுத்த வீட்டுப் பெண்;
எங்கோ புதைந்து போனதை எங்கெங்கோ தேடி விட்டு
விழித்தெழும் கனவுகள்.

11 comments:

  1. கவிதை அருமை கார்த்திகா.

    //சூளாமணியோடு சிந்தமாணி போல//

    சூடாமணி இல்லை?

    குடுகுடுப்பையின் எதிர் கவிதைக்குக் காத்திருக்கிறேன்.. :))

    ReplyDelete
  2. கனவிலிருந்து விழித்தெழுந்து

    கடைசியில் விழிந்தெழும் கனவுகள்

    நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  3. நீங்களும் இப்பதான் விழித்தெழுந்துறீக்கங்க போல?

    ReplyDelete
  4. /*எங்கோ புதைந்து போனதை எங்கெங்கோ தேடி விட்டு
    விழித்தெழும் கனவுகள்*/
    நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  5. அங்க படிச்சுட்டுதான் இங்க வந்தேன். :) அருமையான கவிதைங்க

    ReplyDelete
  6. நன்றி முகிலன்...சூளாமணி தான் கரெக்ட்.சூடாமணி ஒரு வித ஆபரணம் ராமாயணத்துல வரும் ஹனுமான் சீதைகிட்ட இருந்து சூடாமணி வாங்கிட்டு வந்து ராமன் கிட்ட காட்டறதா படிச்ச ஞாபகம்.
    எதிர் கவிதை படிச்சிட்டு கமெண்ட்டும் போட்ருக்கோம் அங்க. :))


    நன்றி ஜமால் ...கனவுகள் இல்லாத வாழ்க்கை இல்லை.கனவிலிருந்து விழித்து எழுவதும் கனவைப் போலவே சுகமானது .

    ReplyDelete
  7. குடுகுடுப்பை said...
    கவுஜ போட்டாச்சு

    கவுஜயா ...கவிதைன்னு சொன்னா எவ்ளோ நல்லா இருக்கு!!!கவுஜயாம்...கவுஜ!!! படிச்சிட்டோம்...படிச்சிட்டோம். :)))

    ReplyDelete
  8. நன்றி அண்ணாமலையான்

    நன்றி அமுதா...

    நன்றி விதூஷ் ...

    நன்றி ஜெய்லானி

    ReplyDelete
  9. கவிதை மிக நன்றாக இருக்குங்க...

    ReplyDelete