Tuesday, December 23, 2008

லிப்ஸ்டிக் !!! ஆண்களுக்கா? பெண்களுக்கா? யாருக்காக இந்த லிப்ஸ்டிக் ?



இப்படித்தான் ஆரம்பிக்கணும்!












பெண்கள் லிப்ஸ்டிக் போட்ட இப்படி இருக்குமாம் !?



ஆண்கள் லிப்ஸ்டிக் போட்ட இப்படித்தான் இருக்குமாம் !?
இது எப்படி இருக்கு? இப்படி ஒரு பதிவு போடக் காரணம் நான் இல்லை .
பொம்மலாட்டம் படம் தான் காரணம்.ஆண்கள் லிப்ஸ்டிக் போடக்கூடாதுங்கறார் நானா படேகர் ...வாஸ்தவம் தானே!!
ஆனா நம்ம அந்தக் கால எம்.ஜி.ஆர் ல இருந்து சிவாஜில இருந்து யார் தான் லிப்ஸ்டிக் போடலை ? இதுல எம்.ji.ஆரெல்லாம் கண்மை போடாம நடிச்சதே இல்லை .அசோகன்...நம்ம துக்ளக் சோ எல்லாம் லிப்ஸ்டிக்கும் ...கண்மையும் இல்லனா பாவம் எப்படித் தான் திரைல வந்திருக்க முடியும்?
கண்மை மீசை....கண்மை புருவம் இதான் பல சூபர் ஸ்டார்களை காப்பாற்றி இருக்கு .அதைப் போயி வேணாம்னு ஒரு இயக்குனரு சொல்லிட்ட ஆச்சா?
நாளைல இருந்து எந்த ஹீரோவும் லிப்ஸ்டிக் போட்டு நடிக்கவே மாட்டாரா என்ன?


பாருங்க இவ்ளோ கலர்ல லிப்ஸ்டிக் இருக்கு இதெல்லாம் பின்ன யார் தான் போடரதாம் ? பொண்ணுங்க மட்டுமே போட்ட லிப்ஸ்டிக் பிசினஸ் படுத்துராதா?
சரி இப்ப விசயத்துக்கு வரேன்.
ஆண்கள் லிப்ஸ்டிக் போடக் கூடாத என்ன?
போடலாம்னு சொல்றவங்க எத்தனை பேர்?
போடக்கொடாதுனு சொல்றவங்க எத்தனை பேர் ?
வாங்க வந்து வரிசையா உங்க கருத்துக்களை சொல்லி விவாதத்தை ஆரம்பிச்சு வச்சிட்டுப் போங்க .

28 comments:

  1. கொடுமைடா சாமி. ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை.

    ராமராஜன் சினிமாவில் போட்டிருந்ததை நினைச்சு பார்த்தாலே இந்த ஆசை போயிரும்.

    இன்னும் வேணுமா? அந்தக் கால சிவாஜி, எம்ஜிஆர் என யாரும் விட்டுவைக்கவில்லை (நமக்கு தெரியாத அளவில் போடப்படும்)

    காதலன் படத்தில் எஸ்.பி.பி போட்டிருப்பாரே (காதலிக்கும் பெண்ணின் கைகள் பாட்டில்)

    இதையெல்லாம் பார்த்த பின்பும் ஏன் ஆண்கள் லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்கும் பிடிவாதம்?

    ReplyDelete
  2. உதடு வெடிச்சா சாப்ஸ்டிக்கே போடுரதில்லை, இதுல லிப்ஸ்டிக் வேறயா, மிஸஸ்.டவுட்டோட மிஸ்டருக்கு ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி போட்டு விடுங்க.

    ReplyDelete
  3. அடடா அருமையான விஷயம் தான்.

    ReplyDelete
  4. போடக்கூடாது - என் கருத்து


    \\வாங்க வந்து வரிசையா உங்க கருத்துக்களை சொல்லி விவாதத்தை ஆரம்பிச்சு வச்சிட்டுப் போங்க .\\

    ஆரம்பிச்சாச்சுல ...

    ReplyDelete
  5. வாங்க சக்திபிரபா ...
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ,

    //கொடுமைடா சாமி. ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை.
    //

    யாரை சொல்றீங்க ? லிப்ஸ்டிக் போடற ஆண்களையா? இல்ல இப்படி ஒரு பதிவு போட்ட என்னையா?

    //இதையெல்லாம் பார்த்த பின்பும் ஏன் ஆண்கள் லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்கும் பிடிவாதம்?//

    புரிய வேண்டிய ஆண்களுக்கு புரிந்தால் சரி .

    ReplyDelete
  6. //உதடு வெடிச்சா சாப்ஸ்டிக்கே போடுரதில்லை, இதுல லிப்ஸ்டிக் வேறயா,//

    அட உங்களை யாரோ லிப்ஸ்டிக் போட்டுக்க சொல்லி கட்டாயப் படுத்தின தொனியில சொல்றீங்க ???!!!

    //மிஸஸ்.டவுட்டோட மிஸ்டருக்கு ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி போட்டு விடுங்க.//

    பதில் சொல்ல தெரியலைனா மிஸ்டர்.டவுட் ஐ ஏன் வம்புக்கு இழுக்கணும்? அவர் லிப்ஸ்டிக் போடறதில்லை .

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இதுவரை ஆண்கள் லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று விவாதிப்பவர்கள் மூன்று பேர்
    சக்திபிரபா
    அதிரை ஜமால்
    மிசஸ்.டவுட்
    அண்ணன் குடுகுடுப்பையின் கருத்தை "ஆண்கள் லிப்ஸ்டிக் போடலாம் லிஸ்ட்டில் சேர்ப்பதா!!! போடக்க்கூடது லிஸ்ட்டில் சேர்ப்பதா" என்பதை அவர் தான் இன்னொரு பின்னூட்டமிட்டு தெரிவிக்க வேண்டும் .பிறகு தான் அவர் விவாத மேடையின் எந்தப் பக்கம் இருக்கிறார் என்பது தெரியும்.

    ReplyDelete
  9. மேட்டரை அப்புறம் பார்க்கலாம். படங்களே மேட்டராய் இருக்கே

    ReplyDelete
  10. //மிஸஸ்.டவுட் //


    பேர் ஒன்றே போதும்.

    ReplyDelete
  11. வாய்மை எனப்படுவது யாதெனில்.............

    ReplyDelete
  12. அது என்ன ராமராஜனை மட்டும் சொல்றது?

    அப்ப மத்தவங்க???????????

    ReplyDelete
  13. லிப்ஸ்டிக் ஆணகளுக்கு வேண்டாம்.

    ReplyDelete
  14. //போடக்கூடாது - என் கருத்து


    \\வாங்க வந்து வரிசையா உங்க கருத்துக்களை சொல்லி விவாதத்தை ஆரம்பிச்சு வச்சிட்டுப் போங்க .\\

    ஆரம்பிச்சாச்சுல ...//

    வாங்க அதிரை ஜமால்
    போடக்கூடாது ----என் கருத்தும் இதே ;
    விவாதத்தை ஆரம்பிச்சு வச்சதுக்கு நன்றி .பார்க்கலாம் எத்தனை பேர் பார்டிசிபேட் பண்ணறாங்கன்னு ?

    ReplyDelete
  15. //
    1.சக்திபிரபா
    2.அதிரை ஜமால்
    3.மிசஸ்.டவுட்
    4.அண்ணன் குடுகுடுப்பை

    "இவர்கள் எல்லோரும் ஆண்கள் லிப்ஸ்டிக் போடகூடாது என்கிறார்கள் ".

    1.துளசி டீச்சர் மற்றும்
    2.சுரேஷ் இருவரும்
    "இன்னும் தெளிவாக தங்களது கருத்தைச் சொல்ல வேண்டும்" அவர்கள் எந்தப் பக்கம் என்று முடிவு செய்ய ?!

    ReplyDelete
  16. //அது என்ன ராமராஜனை மட்டும் சொல்றது?//

    துளசி,

    அவரு போட்டது ஜம்ன்னு பளிச்னு மின்னுச்சு :wail: ரொம்ப கொடுமையா இருக்கும்.

    நாடகத்துறைல பழைய ஆளுங்க நிறைய பேர் போடும் வழக்கம் இருந்துச்சு போல.

    mrs.doubt,

    உங்க போஸ்த் பத்தி சொல்லலைங்க. லிப்ஸ்டிக்கோட ஆண்களை யோசிச்ச பயத்துல அப்படி சொல்லிட்டேன்.

    இந்த விவாதத்தில் "லிப்ஸ்டிக் போடலாம்' ன்னு தைரியமா யாரும் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன். :)

    ReplyDelete
  17. \ மிஸஸ்.டவுட் said...

    //
    1.சக்திபிரபா
    2.அதிரை ஜமால்
    3.மிசஸ்.டவுட்
    4.அண்ணன் குடுகுடுப்பை

    "இவர்கள் எல்லோரும் ஆண்கள் லிப்ஸ்டிக் போடகூடாது என்கிறார்கள் ".

    1.துளசி டீச்சர் மற்றும்
    2.சுரேஷ் இருவரும்
    "இன்னும் தெளிவாக தங்களது கருத்தைச் சொல்ல வேண்டும்" அவர்கள் எந்தப் பக்கம் என்று முடிவு செய்ய ?!\\

    அதானே

    அட வாங்கப்பா - இன்னும் விவாத மேடையே கலைக்கட்டல ...

    ReplyDelete
  18. ரொம்ப‌ முக்கிய‌ம்.. இப்போ.!

    ReplyDelete
  19. வாங்க தாமிரா ...
    முதல் முறை எனது வலைப்பக்கம் வலம் வரும் அண்ணன் தாமிர வாழ்க !!!

    //ரொம்ப‌ முக்கிய‌ம்.. இப்போ.!//


    முக்கியம் தான் ..இல்லையா என்ன பின்ன? எவ்ளோ பெரிய விஷயம்? இப்பிடி பொசுக்குனு கேட்டுட்டிங்க? வந்தது தான் வந்தீங்க நீங்க எந்தப் பக்கம்னு சொல்லாமலே போய்டிங்க?மறுபடி வந்து சொல்லிட்டு போங்க ரங்கமணிகள் சங்க தானைத் தலைவரே !!!

    ReplyDelete
  20. அட என்னப்பா இது எவ்ளோ பெரிய விஷயம் ? ஒருத்தர் கூட ஆண்கள் லிப்ஸ்டிக் போட்டுக்கலாம்னு இதுவரை சொல்லவே இல்லை!!! ஆனாலும் லிப்ஸ்டிக் போடற ஆண்களும் இருக்காங்கனு தமிழ் சினிமா காட்டுதே?!இன்னும் கச்சேரி களை கட்டளையே !!!இப்போதைக்கு லிப்ஸ்டிக் போடக்கொடாது அணி தான் வலுவா இருக்கு ,பார்க்கலாம் எந்த அணி ஜெயிக்கும்னு ?

    ReplyDelete
  21. //உங்க போஸ்த் பத்தி சொல்லலைங்க. லிப்ஸ்டிக்கோட ஆண்களை யோசிச்ச பயத்துல அப்படி சொல்லிட்டேன்.

    இந்த விவாதத்தில் "லிப்ஸ்டிக் போடலாம்' ன்னு தைரியமா யாரும் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன். :)//

    நன்றி ;

    எனக்கும் அப்படித்தான் தோணுது சக்திபிரபா

    ReplyDelete
  22. //மேட்டரை அப்புறம் பார்க்கலாம். படங்களே மேட்டராய் இருக்கே//

    ////மிஸஸ்.டவுட் //


    பேர் ஒன்றே போதும்.//


    இதெல்லாம் ஓவருங்கோ !
    இதான் உங்க கருத்தாக்கும்?!

    ReplyDelete
  23. என்னது ஆம்பளைங்களுக்கு லிப்ஸ்டிக்கா....ஏங்க இப்படி பயப்படுத்தறீங்க??

    ReplyDelete
  24. வாங்க அதுசரி ...

    //என்னது ஆம்பளைங்களுக்கு லிப்ஸ்டிக்கா....ஏங்க இப்படி பயப்படுத்தறீங்க??//

    நான் பயமுறுத்தலை ,லிப்ஸ்டிக் போட்ட ஆண்களைப் பார்த்து தான் நிறைய பேர் பயந்துக்கராங்கனு சக்திபிரபா சொல்றாங்க ,நீங்க என்ன சொல்ல வரீங்க ஆண்கள் லிப்ஸ்டிக் போடக்கூடாதுனா? கொஞ்சம் தெளிவாச்சொல்லிட்டுப் போங்க அதுசரி...அதுசரி!!!

    ReplyDelete
  25. அதான் கலர்லெஸ் இருக்கேப்பா. சொப்ஸ்டிக். போட்டா உதட்டில் வெடிப்பும் வராது. யாருக்கும் தெரியவும் தெரியாது.

    ஆனால்...... விலைவாசிக்குக் கட்டுப்படியாகுமான்னு தெரியலை.
    வீட்டுக்கு ஒன்னு போதாதா செலவு வைக்க!

    ReplyDelete
  26. //ஆனால்...... விலைவாசிக்குக் கட்டுப்படியாகுமான்னு தெரியலை.
    வீட்டுக்கு ஒன்னு போதாதா செலவு வைக்க!//

    1.சக்திபிரபா
    2.அதிரை ஜமால்
    3.மிசஸ்.டவுட்
    4.அண்ணன் குடுகுடுப்பை
    5.துளசிகோபால் ,

    இதன் மூலம் டீச்சரும் லிப்ஸ்டிக் போடக்கூடாது அணியில் நிற்கிறார் என்பதை சகலமாணவர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறேன் .

    ReplyDelete
  27. இது என்ன வம்பாப் போச்சு.....

    போட்டால் தெரியாது. நல்லா இருக்குமுன்னுல்லே சொன்னேன்.

    அந்த ஒன்னு வேற யாருங்கறீங்க:-)))))

    ReplyDelete
  28. //துளசி கோபால் said...
    இது என்ன வம்பாப் போச்சு.....

    போட்டால் தெரியாது. நல்லா இருக்குமுன்னுல்லே சொன்னேன்.

    அந்த ஒன்னு வேற யாருங்கறீங்க:-)))))//


    அந்த ஒன்னு யாருப்பா? கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கு யாரையும் காணோமே!!!
    அட...கோபால் சாரையா சொல்றீங்க டீச்சர் !
    :):):):):):)....(infinity)

    ReplyDelete