Tuesday, January 20, 2009

க்விஸ் ...ஸ்ஸ்...ஸ்!!!

ஒரு சின்ன க்விஸ் வைக்கலாமா ? எவ்ளோ பேர் சரியான விடை சொல்றாங்கனு பார்க்கலாம். இது விளையாட்டு மட்டும் தான் பரீட்சை இல்லை.இதிகாசங்கள் பற்றிய நமது பொது அறிவு எவ்வளவு தூரம் என்று தான் ஒரு கை பார்த்துடலாமே!

சரி இனி கேள்விகளுக்குப் போகலாம்.

  1. ராமாயணத்தில் "ஜாம்பவான்" எனும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
  2. அசோகவனத்தில் சீதைக்கு ஆறுதலாய் இருந்த அரக்கர் குலப் பெண் யார்?
  3. இந்திரனின் தாயார் பெயர் என்ன?
  4. விஸ்வாமித்திரரின் இன்னொரு பெயர் என்ன?
  5. சீதைக்கு பதிலாக ராவணனின் அசோகவனத்தில் தானாகவே சிறைப் பட்டதாகக் கருதப் படும் "பெண்ணின் "பெயர் என்ன?
  6. மஹாபாரதத்தில் "வத்சலா "யார்?
  7. பலராமனின் அன்னை பெயர் அல்லது வாசுதேவரின் முதல் மனைவியின் பெயர் அல்லது கிருஷ்ணரின் பெரிய அன்னையார் பெயர் என்ன?
  8. பிருகன்னளை யார்?
  9. கைகேயியின் பணிப்பெண் யார்?
  10. பஞ்சகன்யாஸ் (பஞ்ச கன்னிகள் )யார் யார்?
  11. மஹாபாரதத்தில் நீதிக்குப் பெயர் பெற்ற கதாபாத்திரம் எது?
  12. கிருபாச்சாரியார் யார்?
  13. சல்லியன் என்ன செய்தான்?
  14. சகாதேவன் எதில் தேர்ச்சி பெற்றவனாக பாரதம் சொல்கிறது?
  15. ராவணன் சீதையை கடத்திச் செல்லும்போது தடுக்க முற்பட்டு அவனுடன் கடுமையாகப் போரிட்டு மடியும் பறவையின் பெயர் என்ன?

அவ்ளோ தான் கேள்விகள்.

பதில்களை டக்கு...டக்குனு அடிச்சு விடுங்க பார்க்கலாம்.

15 comments:

முரளிகண்ணன் said...

11 விதுரன்
13 கர்ணனின் தேரோட்டி
14 ஜோதிடம்
15 ஜடாயு

dondu(#11168674346665545885) said...

ஜாம்பவான்தான் அனுமனுக்கு அவனது சக்தியை எடுத்துரைத்தவர்.

அசோகவனத்தில் சீதைக்கு ஆறுதலாய் இருந்த அரக்கர் குலப் பெண் திரிஜடை, விபீஷனனின் பெண்.

இந்திரனின் தாயார் என்று கேட்டால் எந்த இந்திரன் என கேள்வி வரும். உண்மை கூறப்போனால் இந்திரப் பதவி என்பது ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்து பெற வேண்டியது. அதனால்தான் யாராவது தவம் செய்யவோ, அஸ்வமேத யாகம் செய்யவோ முயன்றால், அப்போது பதவியில் இருக்கும் இந்திரனுக்கு பேதி பிடுங்கும்.

விஸ்வாமித்திரரின் இன்னொரு பெயர் கௌசிகன்.

சீதைக்கு பதிலாக ராவணனின் அசோகவனத்தில் தானாகவே சிறைப் பட்டதாகக் கருதப் படும் "பெண்ணின் "பெயர் சாயா சீதை அல்லது மாயசீதை என துளசி கூறுகிறார். நியூசிலாந்த் துளசி அல்ல, துளசிதாசர்.

மஹாபாரதத்தில் "வத்சலா” பலராமரின் பெண். தென்னிந்தியாவில்தான் இப்பாத்திரத்தை பற்றி கூறுகிறார்கள். வட இந்தியாவில் பெயர் சுரேகா, அவள் பலராமரின் வளர்ப்புப் பெண்.

பலராமனின் அன்னை பெயர் அல்லது வாசுதேவரின் முதல் மனைவியின் பெயர் அல்லது கிருஷ்ணரின் பெரிய அன்னையார் பெயர் ரோஹிணி.

அருச்சுனன் அஞ்ஞாத வாசத்தில் பிருகன்னளை என்னும் பெயரில் திருநங்கையாக இருந்தான்.

கைகேயியின் பணிப்பெண் மந்தரை.

மஹாபாரதத்தில் நீதிக்குப் பெயர் பெற்ற கதாபாத்திரங்கள் இரண்டு, விதுரன், யுதிஷ்டிரன். இருவருமே தருமதேவனின் அம்சங்கள்.

கிருபாச்சாரியார் குலகுரு, துரோணரின் மனைவி கிருபியுடன் இரட்டையாக பிறந்தவர்.

சல்லியன் கர்ணனுக்கு சாரதியாக இருந்து அவனை அதைரியப்படுத்தினான்.

சகாதேவன் சோதிடத்தில் தேர்ச்சி பெற்றவனாக பாரதம் சொல்கிறது.

ராவணன் சீதையை கடத்திச் செல்லும்போது தடுக்க முற்பட்டு அவனுடன் கடுமையாகப் போரிட்டு மடியும் பறவையின் பெயர் ஜடாயு. ஆனால் பதிவு எதுவும் போட்டதாக யாரும் கூறியதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பஞ்ச கன்னிகைகள் அகல்யா, துரௌபதி, சீதா, தாரா மற்றும் மண்டோதரி என எனக்கு சென்னை பல்கலைக்கழக வைணவ்த்துறை தலைவர் கூறினார். அதையும் சுலோக வடிவில் கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அமுதா said...

/*பதில்களை டக்கு...டக்குனு அடிச்சு விடுங்க பார்க்கலாம்.*/
டக்கு ... டக்கு ...
ஓகே???
இராமாயணம், மகாபாரதம் எல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லுவேன். ஆனால் இந்த கேரக்டர் பெயரெல்லாம் சாய்ஸ்ல விட்டுடுவேன்... :-)

குடுகுடுப்பை said...

0/100

நட்புடன் ஜமால் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

KarthigaVasudevan said...

இந்த க்விஸ்ல கலந்துகிட்ட எல்லோருக்கும் நன்றிங்க.(முட்டை வாங்குனவுங்க எல்லாரும் அடுத்த க்விஸ்ல ஒழுங்கா படிச்சிட்டு வந்து அட...யார்கிட்டயச்ச்சும் கேட்டாச்சும் பதில் சொல்ல ட்ரை பண்ணனும்! சரியா? ) வெற்றியா? தோல்வியா இங்கரதேல்லாம் முக்கியமில்லை போட்டினாலும் சரி விளையாட்டுனாலும் சரி கலந்துக்கனும் அதான் முக்கியம்.

சரி இப்போ நான் எனக்குத் தெரிந்த பதில்களையும் சொல்லிடறேன் .ஏதாச்சும் தப்பிருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.

1.ஜாம்பவான் அனுமன் கடல் தாண்டத் தயங்கும் பொது ஊக்குவித்தவர்.(ஊக்கு இல்லை இது ஊக்கம்!)
2.சீதைக்கு அசோகவனத்தில் ஆறுதலாய் இருந்த பெண்ணின் பெயர் திரிஜடை(திரிசலா...திரிசடை) என்றும் சொல்வார்கள்.இவள் விபீசனின்(ராவணனின் தம்பி ) மகளும் கூட.
3.இந்திரனின் தாயார் பெயர் (அதிதி) எந்த இந்திரன் என்று தெரியவில்லை எனக்கு ஒரு இந்திரனை மட்டுமே தெரிவதால்!
4.விஸ்வாமித்திரரின் இன்னொரு பெயர் கௌசிகர் (துர்வாசர்னு யாரை சொல்லுவாங்க டோண்டு அய்யா ?)
5.சீதைக்குப் பதிலாக ராவணனிடம் தானாகவே சிறைப் பட்ட பெண்ணின் பெயர் வேதவள்ளி இவளைத்தான் சாயா என்கிறதா வடமொழி ராமாயணம்?!)
6.வத்சலா என்பது அபிமன்யூவின் தாயார் பெயர் இல்லையா ?பலராமன் கிருஷ்ணரின் சகோதரி இல்லையா இவர்? (நான் அப்படித்தான் நினைத்திருந்தேன்.விரிவா யாராச்சும் விளக்கம் கொடுங்கப்பா)
7.பலராமரின் அன்னை...வாசுதேவரின் முதல் மனைவி பெயர் ரோகிணி .
8.அர்ஜூனன் விராட தேசத்தில் திருநங்கையாக மறைந்து வாழ்ந்தபோது அவனது பெயர் பிருகன்னளை .
9.கைகேயியின் பணிப்பெண் பெயர் மந்தரை அல்லது கூனி.
10.பஞ்ச கன்யாஸ்

1.குந்தி
2.அகல்யா(அகலிகை )
3.மண்டோதரி
4.திரௌபதி
5.தாரா.(வாலியின் மனைவி)

11.மகாபாரதத்தில் நீதிக்குப் பெயர் பெற்ற கதாபாத்திரம் முதலில் விதுரர்! அவரிடம் யுதிஷ்ட்ரர்(தர்மர்) கற்றுக் கொள்கிறார் என்பது பொருந்தும்.
12.கிருபாச்சாரியார் துரோணரின் மனைவி கிருபியின் சகோதரர் .
13.சல்லியன் பாரதப் போர் நடக்கையில் கர்ணனின் தேர் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்போது ஒரு தேரோட்டியின் மகனுக்கு தன்னைத் தேரோட்டியாக நியமித்தது பொறுக்காமல் உதவ மறுத்து தேரை நிர்க்கதியாக விட்டு விட்டுப் போய்விடுகிறான்.
14.சகாதேவன் "சோதிடத்தில்" கை தேர்ந்த நிபுணன் .
15.சீதை கடத்திச் செல்லப் படும்போது போரிட்டு மடியும் பறவையின் பெயர்"ஜடாயு"

இவ்ளோ தாங்க ஆன்சர்ஸ் .பிழைகள் திருத்திக் கொள்ளப் படும்(பிழைகள் இருந்தால் மட்டுமே!!!)

Unknown said...

6.//வத்சலா என்பது அபிமன்யூவின்// மனைவி. விரிவான கதை இந்த சுட்டியில். (சீதைக்கு ராமன் மாமனார்?)

சுபத்ரா, க்ருஷ்ண/பலராமர்களின் சகோதரி அர்ஜுனனின் மனைவி, அபிமன்யுவின் தாயார்.

10. பஞ்ச கன்னியர்: சுவையான குளியல்/அலசல் இங்கே

dondu(#11168674346665545885) said...

அபிமன்யுவின் தாயார் பெயர் சுபத்திரா. சுபத்திராவுக்கும் அருச்சுனனுக்கும் பிறந்தது அபிமன்யு. சுபத்திரா கிருஷ்ணருக்கு சகோதரி முறை. பை தி வே வசுதேவருக்கு ஆறு மனைவிகள், தேவகி மற்றும் ரோகிணியை சேர்த்து.

சல்லியன் நகுல சகாதேவனின் அன்னை மாத்ரியின் அண்ணன். பாண்டவர்களுடன் சேர்ந்து வருவதற்காக பெரும் சேனையுடன் வந்தவனை துரியோதனன் தந்திரமாக தன் கட்சியில் சேர வைக்கிறான். அது ஒரு தமாஷ் கதை.

அப்போது சல்லியன் தருமனுக்கு வாக்கு தருகிறான், கௌரவர் தரப்பில் இருந்து யுத்தம் செய்தாலும் அங்குள்ளவர்களுக்கு அதைரிய பேச்சுக்களால் சோர்வை உண்டாக்குவதாக. கர்ணனுக்கு செய்ததும் அதில்தான் அடங்கும்.

ராஜரிஷி என்னும் படத்தில் விஸ்வாமித்திரர் சிவாஜி கணேசன், துர்வாசகராக நடித்தது ஆர்.எஸ். மனோஹர். துர்வாசர் எனது ஒரு பதிவில் வருகிறார். பார்க்க: http://dondu.blogspot.com/2008/06/blog-post_08.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜேஷ், திருச்சி said...

மிக அருமையான க்விஸ் மற்றும் விடைகள் மிசச் டவுட். பாரம்பரையத்தை வெளிக்கொணரும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

KarthigaVasudevan said...

வாங்க...வாங்க கெக்கேபிக்குணி ...

//கெக்கே பிக்குணி said...
6.//வத்சலா என்பது அபிமன்யூவின்// மனைவி. விரிவான கதை இந்த சுட்டியில். (சீதைக்கு ராமன் மாமனார்?)

சுபத்ரா, க்ருஷ்ண/பலராமர்களின் சகோதரி அர்ஜுனனின் மனைவி, அபிமன்யுவின் தாயார்.

10. பஞ்ச கன்னியர்: சுவையான குளியல்/அலசல் இங்கே//

உங்கவருகைக்கும்...கருத்துக்களுக்கும் நன்றி.(சீதைக்கு ராமன் மாமனார்!!!) இதான் கொஞ்சம் புரியலை.மத்ததெல்லாம் ஏதோ புரியுது.இந்தக் கதைக்கும் ஏதாச்சும் சுட்டி இருந்தா கொடுங்க.

KarthigaVasudevan said...

// dondu(#11168674346665545885) said...
அபிமன்யுவின் தாயார் பெயர் சுபத்திரா. சுபத்திராவுக்கும் அருச்சுனனுக்கும் பிறந்தது அபிமன்யு. சுபத்திரா கிருஷ்ணருக்கு சகோதரி முறை. பை தி வே வசுதேவருக்கு ஆறு மனைவிகள், தேவகி மற்றும் ரோகிணியை சேர்த்து.

சல்லியன் நகுல சகாதேவனின் அன்னை மாத்ரியின் அண்ணன். பாண்டவர்களுடன் சேர்ந்து வருவதற்காக பெரும் சேனையுடன் வந்தவனை துரியோதனன் தந்திரமாக தன் கட்சியில் சேர வைக்கிறான். அது ஒரு தமாஷ் கதை.

அப்போது சல்லியன் தருமனுக்கு வாக்கு தருகிறான், கௌரவர் தரப்பில் இருந்து யுத்தம் செய்தாலும் அங்குள்ளவர்களுக்கு அதைரிய பேச்சுக்களால் சோர்வை உண்டாக்குவதாக. கர்ணனுக்கு செய்ததும் அதில்தான் அடங்கும்.

ராஜரிஷி என்னும் படத்தில் விஸ்வாமித்திரர் சிவாஜி கணேசன், துர்வாசகராக நடித்தது ஆர்.எஸ். மனோஹர். துர்வாசர் எனது ஒரு பதிவில் வருகிறார். பார்க்க: http://dondu.blogspot.com/2008/06/blog-post_08.html

அன்புடன்,
டோண்டு ராகவன்//

தங்களது விரிவான பதிலுக்கு நன்றி டோண்டு அய்யா...
வாசுதேவருக்கு ஆறு மனைவிகள் என்பது எனக்குப் புதிய செய்தி,தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட "மகாபாரதத் தொடரில் "இதைப் பற்றிய காட்சிகள் இல்லை என நினைக்கிறேன்.

சல்லியனை துரியோதனன் என்ன சொல்லி தனது காட்சியில் சேர்த்துக் கொள்கிறான்? இதற்கும் ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்கள்.தெரிந்து கொள்கிறேன்.இந்தக் கதையும் தெரியாது எனக்கு.

மாத்ரி பாண்டுவின் மனைவி என்பது தெரியும்.
தங்களது துர்வாசர் குறித்த விளக்கத்திற்கும் நன்றி .

KarthigaVasudevan said...

ராஜேஷ், திருச்சி said...

மிக அருமையான க்விஸ் மற்றும் விடைகள் மிசச் டவுட். பாரம்பரையத்தை வெளிக்கொணரும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

நன்றி ராஜேஷ்

சகாதேவன் said...

6. அபிமன்யுவின் மனைவி. மாயாபஜார் படத்தில் பார்த்ததால் ஞாபகம்.
14. ஜோசியம். என் ப்ளாக் ஆரம்பித்ததும் நானானி சொன்னார்.
15. ஜடாயு. சம்பூர்ண ராமாயணம் படத்தில் பார்த்தேன்.
மற்ற பதில் எல்லாம் காமென்ட் பார்த்து தெரிந்து கொண்டேன். அடடா இது நினைவில்லாமல் போச்சே என்று தோன்றியது
சகாதேவன்

KarthigaVasudevan said...

//சகாதேவன் said...

6. அபிமன்யுவின் மனைவி. மாயாபஜார் படத்தில் பார்த்ததால் ஞாபகம்.
14. ஜோசியம். என் ப்ளாக் ஆரம்பித்ததும் நானானி சொன்னார்.
15. ஜடாயு. சம்பூர்ண ராமாயணம் படத்தில் பார்த்தேன்.
மற்ற பதில் எல்லாம் காமென்ட் பார்த்து தெரிந்து கொண்டேன். அடடா இது நினைவில்லாமல் போச்சே என்று தோன்றியது
சகாதேவன்//

நன்றி சகாதேவன் ....
உங்கள் க்விஸ் ப்ளாக்கை பார்த்தேன்...நிறைய சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.